14 வயது சிறுவன் போல் தோற்றம்.. உண்மையான வயது என்ன தெரியுமா?
பார்வைக்கு வெறும் 14 வயதேயான நபர் தனது உண்மையான வயதை வெளிப்படுத்த, சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள்.
பார்வைக்கு 14 வயது சிறுவன்
ரஷ்யாவை சேர்ந்த சமூக ஊடக பிரபலம் டெனிஸ் வசுரின், தாம் எங்கு சென்றாலும் தம்முடன் பிறப்பு சான்றிதழை கூடவே எடுத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். 35 வயதான டெனிஸ் வசுரின் பார்வைக்கு வெறும் 14 வயது சிறுவன் என்றே தவறாக கருதப்படுகிறார்.
Image: Jam Press Vid
ஆனால் அவரது பிறப்பு சான்றிதழ் கூட பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக டெனிஸ் வசுரின் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து பொலிசாரிடம் பலமுறை தாம் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் தனது பிறப்பு சான்றிதழ் பார்த்து அதிர்ச்சியடைவதையும் பார்த்திருப்பதாக டெனிஸ் வசுரின் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒரு பேட்டிக்கு பிறகு சமூக ஊடகத்தில் கவனம் பெற்றார். தமக்கு கிடைத்துள்ள இந்த தோற்றமானது ஒருவகையில் வரமாக இருந்தாலும், பலரது வசைபாடலுக்கும் தாம் இலக்கானதாக டெனிஸ் வசுரின் குறிப்பிட்டுள்ளார்.
தமது தோற்றத்தால் தாம் மகிழ்ச்சி
சமூக ஊடகத்தில் எவரும் தம்மை கிண்டலடித்தது இல்லை என குறிப்பிட்டுள்ள டெனிஸ் வசுரின், ஆனால் மோசமாக திட்டியுள்ளதை எதிர்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
Image: Jam Press Vid
நான்கு வயதில் இருந்தே தமக்கு தோற்றத்தில் மாற்றம் ஏதும் நிகழாமல் போயுள்ளது எனவும் பல மருத்துவமனைகளில் ஆலோசனை பெற முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தமது தோற்றத்தால் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவே டெனிஸ் வசுரின் குறிப்பிட்டுள்ளார். பயணங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட டெனிஸ் வசுரின், தற்போது தமது பயண அனுபவங்கள் மற்றும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |