பின்னழகை அதிகரிக்கச் சொன்ன காதலன்: அழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
தன் காதலனின் ஆசைப்படி தன் பின்னழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண், பரிதாபமாக பலியாகியுள்ளார்.
காதலனின் ஆசைக்காக அழகியல் அறுவை சிகிச்சை
பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகிய மொடலான Lygia Fazio (40)வின் காதலன், அவரது பின்னழகை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி, அழகியல் அறுவை சிகிச்சை ஒன்றை செய்துகொண்டுள்ளார் Lygia.
terra
ஆனால், பின்பக்கத்தை பெரிதாக்குவதற்காக உடலுக்குள் பொருத்தப்பட்ட பை சிதைந்து, அதிலுள்ள ரசாயனங்கள் Lygiaவின் உடல் முழுவதும் பரவிவிட்டன. அவற்றை அகற்றுவதற்காக மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டார் Lygia.
பரிதாப முடிவு
ஆனால், கடந்த மாதம் திடீரென Lygiaவை பக்கவாதம் தாக்கியுள்ளது. ஆகவே, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென உயிரிழந்துவிட்டார் Lygia. அவருக்கு Davi, Thor என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Image:
@lygiafazio/Newsflash
காதலனின் ஆசைக்காக பின்னழகை அதிகரிக்கும் முயற்சியில் வாழ்வையே இழந்துவிட்டார் Lygia!