மூளையை பகிர்ந்து கொண்டு பிறந்த இரட்டையர்கள்: பிரித்தானிய மருத்துவ குழுவின் உதவியால் புதிய சாதனை!
மூளைகளை பகிர்ந்து கொண்டு தலைகள் இணைந்து பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலின் அட்ரிலி மற்றும் அன்டோனியா லிமாக்கு பிறந்த பெர்னார்டோ மற்றும் ஆர்தர் லிமா என்ற இரட்டையர்கள், தங்கள் மூளைகளை இணைத்து பகிர்ந்து கொண்டு இருந்த நிலையில் 33 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வயதே கொண்ட ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மொத்தம் ஏழு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன, இவற்றில் கடைசி இரண்டு அறுவை சிகிச்சைகள் மட்டும் 33 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதாகவும், இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட ரியோ டி ஜெனிரோவின் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் நூர் உல் ஓவாஸ் ஜீலானியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் உண்மையான நடைமுறைகளைத் தொடங்குவதற்கு முன் மெய்நிகர் முறையை பயன்படுத்தி பல மாதங்கள் சோதனை நுட்பங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெர்னார்டோ மற்றும் ஆர்தர் லிமா இருவரின் அறுவை சிகிச்சையை தலைமை தாங்கிய ஜீலானி, இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்களின் குறிப்பிடதக்க சாதனை என்றும், இதற்கு தேவையான உதவிகளை வழங்கிய தொண்டு நிறுவனமான ஜெமினி அண்ட்வைட் தனது வேலைகளைத் தொடர பொது நன்கொடைகளை நம்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கை திரும்ப இது சரியான தருணம் இல்லை: கோட்டாபய குறித்து ஜனாதிபதி ரணில் கருத்து
அத்துடன் நாங்கள் சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் புதிய எதிர்காலத்தை வழங்கியதுடன் மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான திறன்களையும் நம்பிக்கையையும் உள்ளூர் மருத்துவ குழுவிற்கு அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.