30 வினாடிகளில் 195 முறை முத்தம்: கின்னஸ் சாதனை படைத்த பிரேசிலில் காதல் ஜோடி
பிரேசிலில் காதல் ஜோடி ஒருவர் வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
பிரேசில் தம்பதியின் புதிய உலக சாதனை
பிரேசிலின் சாவோ பாலோ நகரை சேர்ந்த ரெனாடோ மற்றும் நையாரா என்ற தம்பதி வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.
இருவரும் மருத்துவத் துறையில் பணிபுரியும் நிலையில், ரெனாடோவுக்கு ADHD எனப்படும் கனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டு குறைப்பாடு பாதிப்பு உள்ளது.
இந்த குறைப்பாட்டை முறையான பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முத்தம் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தம்பதியின் உறவு பிரிதல்
முத்தம் கொடுக்கும் இந்த சாதனையை புரியும் போது தம்பதியின் ஒருங்கிணைந்த நகர்வும் வேகமும் பார்பதற்கு மிகவும் சீரானதாக இருந்தது. அதுவே தம்பதியை இந்த சாதனையை படைக்க வைத்துள்ளது.
சாதனைக்கு பிறகு ரெனாட்டோ இது தொடர்பான தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

மேலும் இந்த சாதனை தங்களுடைய வலுவான உறவின் புரிதலையும், ஒருங்கிணைப்பையும் காட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ரெனாடோ மற்றும் நையாரா தம்பதியின் இந்த முயற்சி தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |