16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது மேயர்: பிரேசிலில் தாய்க்கு கிடைத்த பதவி உயர்வு
65 வயதான பிரேசிலின் பரானா மாகாணத்தின் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனி 16 வயதுடைய டீன் ஏஜ் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
16 வயது பெண்ணுடன் திருமணம்
பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள அரௌகாரியா(Araucaria) நகராட்சியின் மேயரான ஹிசாம் ஹூசைன் டெஹைனி(65) கடந்த மாதம் 16 வயதுடைய டீன் ஏஜ் பெண்ணான காவான் ரோட் காமர்கோவை(Kauane Rode Camargo) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உயர்நிலைப் பள்ளி மாணவியான காவான் ரோட் காமர்கோ கடந்த ஆண்டு 15 முதல் 17 வயதுடைய சிறுமிகளுக்கான மிஸ் அரௌகாரியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்து இருந்தார்.
GMC
ஏப்ரல் 12ம் திகதி அன்று நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பிறகு ஹிசாம் ஹூசைன் டெஹைனி( Hissam Hussein Dehaini) அவரது மேயர் பதவியில் , குடியுரிமை கட்சியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தார்.
பதவி உயர்வு
இதற்கிடையில் திருமணம் நடைபெற்ற ஒருநாள் கழித்து 16 வயதான டீன் ஏஜ் சிறுமியான காவான் ரோட் காமர்கோவின் தாய் மரிலீன் ரோட் அரௌகாரியா நகராட்சியின் கலாச்சார செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார், இவர் இதற்கு முன்னதாக பொது செயலாளராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
GMC
அதேசமயம் காவான் ரோட் காமர்கோவின் சகோதரி எலிசாங்கலா ரோடே சிட்டி ஹாலில் கமிஷனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் சிவில் சட்டத்தின் படி 16 வயது நிறைவடைந்த ஆண், பெண் இருவரும் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம், இருப்பினும் 16 வயதுடைய சிறுமியின் திருமணத்திற்கு அவரது தாயார் பதவி உயர்வு அடைந்தது குறித்து பரானாவின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
Youtube/Talles Dinheiro