பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்: ஜனாதிபதி மாளிகையில் தீவிர சோதனை!
பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் வெடிப்பு
புதன்கிழமை மாலை பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தின் வெளியே ஏற்பட்ட தொடர் வெடிப்புகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் நீதிமன்ற அமர்வு முடிந்த சிறிது நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
இரண்டு சக்தி வாய்ந்த வெடிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
விசாரணை தீவிரம்
ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் துல்லியமாக தெரியவரவில்லை, நிகழ்வுகள் இன்னும் விசாரணையில் உள்ளன.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, நீதிமன்றத்தில் ஏற்பட்ட வெடிப்புகள் 20 வினாடிகள் இடைவெளியில் நடந்ததாகக் கூறுகின்றன.
இந்த சம்பவம் பிரேசிலியாவின் த்ரீ பவர்ஸ் பிளாசாவில்(Brasilia's Three Powers Plaza) பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்த பகுதியில் உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய அரசு கட்டடங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை முற்றுகையிட்டு ஜனாதிபதி மாளிகை வளாகத்தை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |