போட்டி மேடையில் மயங்கி விழுந்து இறந்த 30 வயது வீரர்
பிரேசிய உடற்கட்டமைப்பு (Bodybuilder) வீரர் ஒருவர் போட்டியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டி
பிரேசிலின் மேற்கில் உள்ள நகரான Campo Grandeயில் வருடாந்திர Pantanal உடற்கட்டமைப்பு (bodybuilding) சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் 30 வயதான வாண்டர்ஸன் டா சில்வா பங்குபெற்றார். அவர் மேடையை விட்டு வெளியேறும்போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரிடம் சென்ற அவசர சிகிச்சைப் பிரிவினர், ஒரு மணிநேரத்திற்கு மேலாக சிகிச்சை அளித்துள்ளனர்.
கடவுளிடம் பிரார்த்தனை
ஆனால், துரதிர்ஷ்டவசமாக வாண்டர்ஸன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு இரத்த அழுத்தம் இருந்ததாக வாண்டர்சஸின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
வாண்டர்சஸின் பயிற்சியாளர் கூறுகையில், "இந்த இழப்பைத் துக்கப்படுத்துவதும், அவரது குடும்பத்தினருக்கும் நம் அனைவருக்கும் ஆறுதல் அளிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதும் மட்டுமே நாம் செய்ய முடியும். நீங்கள் எங்கள் குழு மற்றும் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், எப்போதும் இருப்பீர்கள்" என தெரிவித்துள்ளார்.
திருமணமான வாண்டர்ஸனுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |