தாலி கட்டிய சில நிமிடங்களில் முறிந்த திருமணம்! மணப்பெண்ணின் கேள்வியால் கலங்கிய மாப்பிள்ளை
காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் பந்தத்தை முறித்த தம்பதி
தமிழக மாவட்டம் ஒன்றில் திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மாப்பிள்ளையை வேண்டாம் என மணமகள் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூரில் 32 வயது இளைஞருக்கும், 25 வயது இளம்பெண்ணிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோவிலில் இவர்களது திருமணம் நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருமணம் மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது மாப்பிள்ளையின் காலை மணமகள் பார்த்துள்ளார். அவரது இரண்டு கால்களில் ஒரு கால் லேசாக வளைந்து இருப்பதைக் கண்ட அவர், இதுகுறித்து மணமகனிடம் கேட்டுள்ளார்.
தனக்கு விபத்தில் அடிபட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் கால் அப்படி இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
அதன் பின்னர் இந்த விவகாரம் மண்டபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு வீட்டாரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பொலிசார் இரண்டு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மணமகளின் குடும்பத்தினர் சமாதானம் ஆகவில்லை.
Getty/indianexpress.com
இதனால் மணமக்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர். திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமக்கள் தங்கள் இந்த முடிவை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.