திருமணத்தின் போது மணமகள் செய்த காரியம்! அனைவர் கண்களிலும் கண்ணீர்.. அணைத்து கொண்ட மணமகன் வீடியோ
திருமண நிகழ்வின் போது மணமகள் தனது தலைமுடியை பாதியாக வெட்டிக் கொண்ட சம்பவத்தின் நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணத்தின் போது பொதுவாக மணமகள் தனது சிகையலங்காரத்தின் மீது அதிகம் கவனம் செலுத்துவார். ஆனால் சிகை தொடர்பில் மணமகள் செய்த நெகிழ்ச்சி செயலின் வீடியோவை பிரபல புகைப்பட கலைஞர் பிரிஹானா எஸ்லிங்கர் என்பவர் வெளியிட்டுள்ளார்.
புற்றுநோயாளிகளுக்கு தானம்
அதில், திருமண வரவேற்பின் போது மணமகள் நடந்து செல்வது தெரிகிறது. பின்னர், அவர் தனது தலைமுடியை வெட்டுவதாக திருமண விழாவின் போது அனைவர் முன்னிலையிலும் அறிவிக்கிறார். புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்ய விரும்புவதால், தனது தலைமுடியை வெட்ட விரும்புவதாக அந்த மணமகள் தெரிவித்தார்.
அனைவரும் கண்ணீர் மல்க
அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கண்ணீர் மல்க மணமகளின் அறிவிப்பால் நெகிழ்ந்தனர்.
திருமணத்திற்காக வளர்த்த நீண்ட ஜடை முடியை வெட்டிய மணமகள், கடைசியில் அதனை கையில் ஏந்தியபடி, வீடியோவுக்கு போஸ் கொடுத்தார்.
மேலும் மணமகள் தனது தலைமுடியை பாதியாக வெட்டிக் கொள்ளும் போது, மணமகன், மணமகளை அணைத்து முத்தமிட்டார்.
குறித்த வீடியோ லைக்குகளை குறித்து அதிகம் பகிரப்பட்டு வருகிறது.