3 பில்லியன் செலவில் கட்டப்பட்ட பாலம் வெடிவைத்து தகர்ப்பு: பின்னணியில் இருப்பது யார்?
ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்கும் பாலம் ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டதில், பாலத்தில் காரில் பயணித்த ஒரு தம்பதியர் பலியானார்கள்.
புடினுக்கு பிடித்த பாலம்
ரஷ்ய ஜனாதிபதியான புடின், கிரீமியாவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்கும் வகையில் பிரம்மாண்ட பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
Credit: East2West
3 பில்லியன் பவுண்டுகள் செலவில் கட்டப்பட்ட அந்த பாலம், புடினுக்கு பிடித்த பாலம் என குறிப்பிடப்படுகிறது. 12 மைல் நீளம் கொண்ட அந்த பாலம், உக்ரைன் போரில் ஆயுதங்களைக் கொண்டு செல்ல ரஷ்யாவுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிவந்தது.
அதிகாலையில் வெடித்த குண்டுகள்
இந்நிலையில், இன்று அதிகாலை 3.04 முதல் 3.20 மணிக்குள் அந்த பாலம் தாக்குதலுக்குள்ளானது. தாக்குதலில், பாலத்தின் சில பகுதிகள் முற்றிலும் நாசமாகியுள்ளன.
Credit: East2West
பாலத்தின் மீது காரில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வெடிவிபத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், கார் ஒன்று வெடிவிபத்தில் சிக்க, அதில் பயணித்த ஒரு தம்பதியர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களது மகளான 14வயது சிறுமி படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
இந்த வெடி விபத்து நிகழ்ந்ததும், அதற்கு உக்ரைன்தான் காரணம் என ரஷ்ய தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் ட்ரோன்கள் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், ட்ரோன்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாகவும், ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
Credit: East2West
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |