உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க உறுதியளித்துள்ள பிரித்தானியா: ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.
உக்ரைனுக்கு உதவும் நாடுகள்
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, போரில் பயன்படுத்த ஆயுதங்கள் கோரி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துவருகிறார்.
அவ்வகையில், பிரித்தானிய பிரதமர் ரிஷியையும் அவர் சந்தித்தார். தாக்குதல் நடத்தும் சில ட்ரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்க ரிஷி உறுதியளித்துள்ளார்.
ரஷ்யா கோபம்
ஆனால், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை கோபமடையச் செய்துள்ளது. பிரித்தானியா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதை எதிர்மறையாக ரஷ்யா பார்ப்பதாக தெரிவித்துள்ள கிரெம்ளின் வட்டாரம், இது மேலும் அழிவுக்கும், இராணுவ நடவடிக்கைக்கும்தான் வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளது.
மேலும், உக்ரைன் ஜனாதிபதி, பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலாக்கிக்கொண்டே செல்வதாகவும் ரஷ்ய தரப்பு எச்சரித்துள்ளது.