சகோதர சகோதரி இடையே.., பல்கலைக்கழக வினாத்தாளில் அதிர்ச்சியூட்டும் கேள்வி
பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாலியல் உறவு குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டது. இந்த கேவலமான கேள்வி நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது.
மோசமான கேள்வி
இந்த மோசமான கேள்வி இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட COMSATS பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றது.
வினாத்தாளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இப்படி ஒரு கேள்வியை அமைத்த ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சகோதர சகோதரி இடையே உடலுறவு
டிசம்பர் 2022-ல் இளங்கலை மின் பொறியியல் (BEE) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
“ஜூலியும் மார்க்கும் அண்ணன் தங்கை. அவர்கள் கல்லூரியிலிருந்து கோடை விடுமுறையில் பிரான்சுக்கு ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள்.
ஒரு இரவு அவர்கள் கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு அறையில் தனியாக தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டால் அது சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் என்று முடிவு செய்தனர்.
குறைந்தபட்சம், அவர்கள் இருவருக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என நினைக்கின்றனர்."
ஜூலி பிறப்புக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மார்க் ஆணுறையைப் பயன்படுத்தினார் என்றும், அவர்கள் இருவரும் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டோம் என்று சபதம் செய்தாலும், இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருப்பதை ரசித்தார்கள் என்றும் அந்தக் கேள்வியில் இருந்தது.
preparationpoint.info
உதாரணங்களைச் சேர்க்கவும்..
வினாத்தாளில் இப்படி ஒரு சூழலை விவரித்து, அதைத் தொடர்ந்து மாணவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்வியில், இந்த முழு காட்சியைப் பற்றியும், சகோதர சகோதரிகள் இடையே உறவு கொள்வது நல்லதுதானா என்றும் அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கான பதிலில் காரணங்களைக் கூறவும் மற்றும் "சில பொருத்தமான உதாரணங்களைச் சேர்க்கவும்" என்று கேள்வி கேட்கப்பட்டனர்.
இந்த கேள்வியை வழங்கிய ஆசிரியர் பேராசிரியர் கைர் உல் பஷார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
Stop dusting the filth under the carpet to protect the culprits. Is it enough to fire that moron who asked such a filthy question?Don’t the higher ups in the university know what’s going on? Or is the #comsatsuniversity owned by the teacher? Stop this nonsense rant #COMSATS pic.twitter.com/7GMBZ3ynTK
— Mishi khan (@mishilicious) February 20, 2023