பிரஸ்ஸல்ஸில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தேடுதல் வேட்டை, மெட்ரோ நிலையங்கள் மூடல்
பிரஸ்ஸல்ஸில் உள்ள கிளமென்சோ மெட்ரோ நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவமானது புதன்கிழமை காலை 6:15 மணி அளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து பல சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு நபர்களை அதிகாரிகள் தற்போது தேடி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளில் இருவரும் நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுடுவது பதிவாகியுள்ளது.
இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஒருவரை குறிவைத்து சுட்டதாக தெரிகிறது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சந்தேக நபர்கள் மெட்ரோ சுரங்கப் பாதைக்குள் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
பிரஸ்ஸல்ஸ் மிடி மற்றும் மத்திய ரயில்வே பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தின் படங்கள் தீயணைப்பு வீரர்கள், பாரா மெடிக்குகள் மற்றும் பொலிஸ் தடுப்பு உட்பட அவசரகால சேவைகளைக் காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |