வேகமாக பரவும் கொள்ளை நோய் ஒன்று மீண்டும் திரும்ப வாய்ப்பு: சிலர் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள்
மிக வேகமாக பரவும் கொடிய கொள்ளை நோய் ஒன்று மீண்டும் திரும்ப வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
60 சதவீதத்தை மொத்தமாக
1300களில் Black Death என்பது ஐரோப்பிய மக்கள் தொகையில் 60 சதவீதத்தை மொத்தமாக அழித்துச் சென்றது. இந்த நிலையில், ரஷ்யாவின் முதன்மை மருத்துவர்களில் ஒருவரான அன்னா போபோவா அச்சுறுத்தல் குறித்து எச்சரித்துள்ளார்.
@getty
நீண்ட காலமாக செயலற்ற நிலையில் காணப்பட்ட அந்த பெருந்தொற்றானது தற்போது புவி வெப்பமடைதலின் காரணமாக வேகமாக பொது சுகாதாரத்திற்கு ஆபத்தாக மாறி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய வெப்பநிலை கவலை கொள்ளும் வகையில் அதிகரித்துவரும் நிலையில் Black Death மீண்டும் திரும்ப வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டுமின்றில் உலகில் தற்போது கொள்ளை நோய் பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிக்கல்கள் தொடர்ந்து அதிகரிக்க, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவில் தொற்றுநோய் பாதிப்பு தொடர்பிலான தகவல்கள் சமீப ஆண்டுகளாக வெளிவருகின்றன என்கிறார்.
வேகமாக பரவும் கொள்ளை நோய்கள் பொதுவாக காட்டில் காணப்படும் சிறிய விலங்குகளில் வாழும் ஈக்களால் எளிதாக பரவும் என்றே கூறப்படுகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை முன்னெடுக்க தவறினால் 24 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படாலம்.
கொத்தாக புதைத்த பகுதிகளில்
சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் இதன் தாக்கம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், 60 ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்யாவின் ஒருபகுதியில் Black Death பதிவாகியிருப்பதாக தகவல் வெளியானது.
@getty
மேலும் பிரித்தானியாவிலும், முன்னர் சடலங்களை கொத்தாக புதைத்த பகுதிகளில் அந்த கிருமிகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுகின்றனர். ஆய்வாளர்கள் குழு 34 எலும்புக்கூடுகளிலிருந்து மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
இதற்கிடையில், சிலர் எப்படி, ஏன் பிளேக் நோயிலிருந்து தப்பிக்க முடியும், மற்றவர்கள் அழிந்து போகிறார்கள் என்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்திய ஆய்வு ஒன்று பல நூற்றாண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளின் டிஎன்ஏவை ஆய்வு செய்து, அடிக்கடி ஏற்படும் ஆபத்தான நோயிலிருந்து தப்பிப்பிழைக்க உதவும் ஒரு விசித்திரமான mutationsஐ கண்டறிந்தது.
அதாவது உங்களிடம் ERAP2 எனப்படும் மரபணுவுடன் இணைக்கப்பட்ட சரியான mutations இருந்தால் நீங்கள் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்க 40 சதவிகிதம் அதிக வாய்ப்பிருப்பதாக கண்டறிந்தனர்.
ஆனால் அதில் நம்பகத்தன்மை தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை ஆய்வாளர்கள் பலர் எழுப்பியுள்ளனர்.