புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் மோடியின் படத்தை ஒளிரச்செய்த துபாய்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் அவரது உருவப்படம் ஒளிரச்செய்யப்பட்டது.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, இந்திய தேசியக்கொடியின் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் அலங்கரிக்கப்பட்டது.
இந்த சிறப்பு நிகழ்வுக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது சமூக வலைதள பக்கத்தில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரது பதிவில், "உங்கள் பிறந்தநாளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் தொடரட்டும். இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் அதன் மக்களின் நலனுக்கும் நீங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
#WATCH | Dubai's Burj Khalifa illuminated tonight with the images of PM Narendra Modi, on the occasion of his 75th birthday. pic.twitter.com/gamw6cRaoq
— ANI (@ANI) September 17, 2025
இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ரஷ்யா, இஸ்ரேல், இத்தாலி மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது உலக அரங்கில் இந்தியாவின் தாக்கத்தையும் மோடியின் தலைமையின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
HappyBirthdayModi, Burj Khalifa glows for Modis 75th Birthday, Modi 75th Birthday, PM Narendra Modi