லொறி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 19 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடு ஒன்றில் லொறி மீது பஸ் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லொறி மீது மோதிய பஸ்
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் இசிகா நகரில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அப்போது டவ்லா-இடா சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து எதிரே வந்த லொறி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
?A fatal accident at Edea has left several persons death and others wounded.
— KAMPII PRODUCTIONS (@KAMPIIPRODUCTI1) May 26, 2023
A bus carrying mourners collided with a heavy duty truck.
The victims of the accident were going to burry a love one.#Cameroun #Cameroon #237Showbizgist #kampiiproductions pic.twitter.com/30RlzHGvvU
19 பேர் உயிரிழப்பு
இந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் சிலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Twitter