ஆப்பிரிக்க நாட்டில் லொறி மீது அடுத்தடுத்து மோதிய 2 பேருந்துகள்: கால்நடைகளுடன் 15 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடு ஒன்றில் லொறி மீது இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து மோதிய பஸ்கள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லொறி மீது இரண்டு பஸ்கள் அடுத்தடுத்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை தலைநகர் பமாக்கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லொறி சென்று கொண்டு இருக்கும் போது பனா பகுதியில் லொறி மீது எதிரே வந்த பஸ் மோதியது.
AFP
மேலும் அதனை தொடர்ந்து பின்வந்த மற்றொரு பேருந்தும் மோதி விபத்தில் சிக்கியது.
15 பேர் பலி
இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் வரை உடல் நசுங்கி உயிரிழந்தனர். அத்துடன் 32க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் லொறியில் இருந்த கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இரண்டு பஸ்களும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டுள்ள இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் பரப்பியுள்ளது.