ஹொட்டல் கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! உலகளவில் வைரலான புகைப்படம்
உணவகம் ஒன்றின் கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியில் வந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி.
கழிவறையை பயன்படுத்தியதற்கு தனி கட்டணம் செலுத்த கோரிய உணவகம்.
உணவகத்தில் கழிவறையை பெண்ணொருவர் பயன்படுத்தியதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் வைரலாகியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள Guatemalaல் அமைந்துள்ளது La Esquina Coffee Shop என்ற பிரபலமான உணவகம். இந்த உணவகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த காபியை சாப்பிட்ட பின்னர் கழிவறையை பயன்படுத்தினார்.
பின்னர் காபிக்கு பணம் செலுத்த போன அந்த வாடிக்கையாளர், அதன் பில்லைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் குடித்த காபியின் விலையை விட கழிவறையை பயன்படுத்தியதற்கான விலை அதிகமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அந்த உணவகத்தின் பில்லை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
Twitter/@jpdardon
இதையடுத்து இயற்கை உபாதைகளை கழிப்பது என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானது.
இதிலும் கொள்ளை லாபம் பார்க்கும் இந்த கார்ப்பரேட் முதலாளிகள் உணவகங்களில் கழிவறையை பயன்படுத்துவதற்கும் கட்டணம் வசூலிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த குறித்த உணவகம், தவறாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதை திருப்பிக்கொடுக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Los Q58.30 más caros de la historia. Vaya trolleada al restaurante. pic.twitter.com/WUf1FrHbHU
— JPDardónP (@jpdardon) August 31, 2022