ஓன்லைனில் ஓர்டர் செய்த கேக்.., 5 வயது குழந்தை உயிரிழப்பு, பெற்றோர்கள் கவலைக்கிடம்
ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரியும் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் ஓர்டர் செய்த கேக்கை கேன்சல் செய்த பிறகு வீட்டிற்கு கொண்டு வந்ததால் விபரீதம் நேர்ந்துள்ளது.
5 வயது குழந்தை மரணம்
பெங்களூருவில், ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணிபுரிபவர் பாலராஜ். இவர், வாடிக்கையாளர் ஒருவர் ஓர்டர் செய்த கேக்கை கேன்சல் செய்த பிறகு வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது, அவர் கொண்டு வந்த கேக்கை சாப்பிட்ட அவரது 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஸ்விக்கியின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "பெங்களூருவில் நடந்த சம்பவத்திற்கு வேதனை அடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
இது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ஸ்விக்கி செயலியில் உள்ள அனைத்து உணவகங்களும் FSSAI உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |