எனக்கு கங்காரு கிடைக்குமா? புடின் விமர்சகர் ரஷ்ய சிறை அதிகாரிகளிடம் வினோத கோரிக்கை
புடின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி ரஷ்ய சிறை அதிகாரிகளிடம் பல வினோதமான கோரிக்கைகள் குறித்து கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவரும், புடினின் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி, எவ்வாறு பல வினோதமான கோரிக்கைகளுடன் பல மாதங்களாக சிறை அதிகாரிகளை கேலி செய்துள்ளார் என்பதைக் காட்டும் கடிதங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் சிறையில் இருந்துகொண்டு அதிகாரிகளிடம் தனக்கு கிமோனோ (ஜப்பானிய உடை), பலாலைக்கா (ரஷ்ய இசைக்கருவி), கருவண்டு மற்றும் கங்காரு ஆகியவை தனக்கு வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் கேலியாக கேட்டுள்ளார்.
AP
அலெக்ஸி நவல்னி இப்போது மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 250 கிமீ (115 மைல்) தொலைவில் உள்ள மெலெகோவோவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு IK-6 தண்டனை காலனியில் இருக்கிறார். அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன என்று அவர் ஆன்லைனில் வெளியிட்ட ரஷ்ய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
AP: Pavel Golovkin
"நீங்கள் ஒரு தண்டனை அறையில் இருக்கும் போது மற்றும் அதிக பொழுதுபோக்கு இல்லாத போது, நீங்கள் எப்போதும் சிறை நிர்வாகத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்களை மகிழ்விக்க முடியும்" என்று நவல்னி கூறியுள்ளார்.
நவல்னி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக 11-1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.