தொப்பையை குறைக்க உதவுமா திரிபலா?
இன்றைய காலத்தில் தொப்பையை குறைப்பது என்பது ஒரு மிகவும் பெரிய சவாலாக மாறிவிட்டது.
தொப்பை கொழுப்பை குறைக்க பலர் மருந்துகளை நாடுகிறார்கள், அதனால் நம் உடலில் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், தொப்பையை குறைக்கவும் இயற்கை வழிகள் பல உள்ளது.
அதில் இயற்கை பொருட்களில் ஒன்றான திரிபலா பொடி உடல் தொப்பையை விரைவில் குறைக்க உதவுகின்றது. அந்தவகையில் இது எப்படி உதவி புரிகின்றது என இங்கே பார்ப்போம்.
திரிபலா தொப்பையை குறைக்க உதவுமா?
திரிபலா உடலில் உள்ள நச்சுகளை அகற்றி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. திரிபலா சூர்ணம் தொப்பையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.
அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பைக் காணாமல் போயிடும்.
மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, தினமும் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
எப்படி பயன்படுத்தலாம்?
தொப்பையை குறைக்க, திரிபconsலாவை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடலாம்.
இதற்கு திரிபலாவை தண்ணீரில் ஊறவைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கவும்.
சில நாட்களில் நீங்கள் விரும்பிய முடிவைப் பெறத் தொடங்குவீர்கள்.