இந்திய மாணவர்களுக்கு 100 மில்லியன் டொலர் கல்வி உதவித்தொகை அறிவித்த கனடா
India
Education
Job Opportunity
Mark Carney
Scholarship
By Ragavan
கனடா அரசு, இந்திய மாணவர்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 200 பேருக்கு முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளன.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி அலுவலகம் வெளியிட்ட புதிய கனடா-இந்தியா திறமைகள் கூட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கல்வி உதவித்தொகைகள், பல்கலைக்கழக கூட்டாண்மைகள்மற்றும் இந்தியாவில் 3 ஹைபிரிட் கல்வி மையங்கள் உருவாக்கப்படுகின்றன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- ரொறன்ரோ பல்கலைக்கழகம் 200 முழுமையான உதவித்தொகைகளை வழங்குகிறது.
- 13 புதிய இந்திய-கனடா பல்கலைக்கழகங்கள் கூட்டாண்மைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
- திருப்பதி IIT, IISER, டல்ஹவுசி பல்கலைக்கழகம் இணைந்து Innovation Campus-ஐ உருவாக்குகின்றன.
- AI ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான McGill மற்றும் Toronto Centres of Excellence தொடங்கப்படுகின்றன.
- கலை, இசை, வெளியீடு மற்றும் பொழுதுபோக்கு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்திய மாணவர்களுக்கு கனடாவில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US