கனடாவின் மக்கள்தொகையில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி: பின்னணியில் புலம்பெயர்தல்
கனடாவின் மக்கள்தொகை, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்ததே என தெரியவந்துள்ளது.
மக்கள்தொகை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி
நேற்று, புதன்கிழமையன்று கனடாவின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், கனடாவின் மக்கள்தொகை 76,068 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது, மக்கள்தொகையில் 0.2 சதவிகித வீழ்ச்சியாகும்.
அதே காலகட்டத்தில், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை, அதாவது, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, 176,479 குறைந்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்குப் பின் இந்த அளவுக்கு தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது இப்போதுதான்.
அக்டோபர் மாதம் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள்தொகை 41,575,585 ஆக உள்ளது.

கனடா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் அனுமதிகளைக் குறைத்துவருகிறது.
அதன் விளைவாகவே கனடாவின் மக்கள்தொகை இந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக கனடா புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |