ட்ரம்பால் கனேடிய பல்கலைக்கழகங்களை நாடும் அமெரிக்க மாணவர்கள்
அமெரிக்காவில் வசிக்கும் அதிகமான மாணவர்கள் கனேடிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
27 சதவீதம் அதிகரித்துள்ளதாக
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்கலைக்கழகங்களுக்கான பெடரல் நிதியைக் குறைத்து, வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து நெருக்கடி அளித்து வருவதாலையே கனேடிய பல்கலைக்கழகங்களை மாணவர்கள் நாடுவதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வான்கூவர் வளாக அதிகாரிகள் தெரிவிக்கையில், 2025 கல்வியாண்டில் தொடங்கும் திட்டங்களுக்கான அமெரிக்க குடிமக்களிடமிருந்து பட்டதாரி விண்ணப்பங்களில் மார்ச் 1 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், செப்டம்பரில் படிப்பைத் தொடங்க விரும்பும் அமெரிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கும் திட்டங்களுடன், வான்கூவர் வளாகம் இந்த வாரம் பல பட்டதாரி திட்டங்களுக்கான அமெரிக்க குடிமக்களுக்கான சேர்க்கையை மீண்டும் துவங்கியுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ரொறன்ரோ பல்கலைக்கழகம், 2025 திட்டங்களுக்கான ஜனவரி காலக்கெடுவிற்குள் அதிகமான அமெரிக்க விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளது.
வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலும் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க மாணவர்களின் விண்ணப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். ரொறன்ரோ மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகங்கள் அமெரிக்க மாணவர்கள் அதிகம் நாடுவதன் காரணம் தொடர்பில் தகவல் வெளியிடவில்லை என்றாலும், வான்கூவர் வளாகம் மட்டும் ட்ரம்பின் கொள்கைகளே காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
நாடுகடத்தும் நடவடிக்கை
ட்ரம்ப் நிர்வாகம் ஏராளமான பல்கலைக்கழகங்களுக்கான நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் பெடரல் நிதியை முடக்கியுள்ளது. மட்டுமின்றி, பல்கலைக்கழக வளாகத்தில் யூத எதிர்ப்புக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதில் தோல்வி கண்டதாக குறிப்பிட்டு, கொள்கைகளை மாற்றம் செய்ய ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தமளித்து வருகிறது.
மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சில வெளிநாட்டு மாணவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அத்துடன் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கனடா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை வரம்பிட்டுள்ளது.
அதாவது அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச மாணவர்களுக்கு குறைவான இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |