மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு: மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்
நடிகரும், மறைந்த தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு 2024 ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது
தமிழ் திரைப்பட துறையின் சிறந்த நடிகரும், மறைந்த தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக கேப்டன் விஜயகாந்திற்கு 2024ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பத்ம விருதுகள்
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் பட்டியலில் இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர்(பாகன்), தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி ஆகியோருக்கும், வைஜெயந்திமாலா, சிரஞ்சீவி, பத்மா சுப்ரமண்யம், வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷண் விருதுகள்
வைஜெயந்திமாலா, சிரஞ்சீவி, வெங்கய்ய நாயுடு, பிந்தேஷ்வர் பதக், பத்மா சுப்ரமண்யம்.
பத்ம பூஷண் விருதுகள்
ஃபாத்திமா ஃபீவி, ஹோர்முஸ்ஜி, சீதாராம் ஜிண்டல், யங் லியு, விஜயகாந்த், ராஜகோபால், குந்தன் வியாஸ், சத்யபிரதா முகர்ஜி, தேஜஸ் மதுசூதன் படேல், அஷ்வின் பாலசந்த் மேத்தா, உஷா உதுப், தத்தாத்ரே அம்பாதாஸ், டோக்டன் ரின்போச்சே, பியாரேலால் சர்மா போன்றோருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது
பர்பதி பருவா, சாமி முர்மு, சங்க்தங்கிமா, ஜாகேஷ்வர் யாதவ், ஓம்பிரகாஷ் சர்மா, மச்சிஹான் சாசா, ஜி. நாச்சியார், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vijayakanth, PadmaAwards, PadmaBhushan, Tamilnadu, Venkaiah Naidu, Indian Government,