ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
வாழும் காலம் முழுவதும் கொடுத்தே பழகிய அமெரிக்கர் ஒருவர், தனது இறுதிச்சடங்கின்போது மக்களை பண மழையால் நனைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் வாழ்ந்துவந்த டேரல் தாமஸ், மற்றவர்களுக்கு தாராளமாக உதவும் குணம் கொண்டவர் ஆவார்.
தாமஸ் அல்சீமர் பிரச்சினை காரணமாக தனது 58ஆவது வயதில் உயிரிழந்தார். கிழக்கு டெட்ராய்டில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அப்போது, திடீரென ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து பணம் கொட்ட, மக்கள் ஓடோடிச் சென்று அந்த பணத்தை சேகரித்துள்ளார்கள்.
5,000 டொலர்கள் அவ்வகையில் ஹெலிகொப்டரிலிருந்து கொட்டப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், தனது சேமிப்பை, தனது இறுதிச்சடங்கின்போது இப்படி ஹெலிகொப்டர் மூலம் கொட்டவேண்டும் என்பது தாமஸின் இறுதி ஆசையாம்.
வாழும்போதும் கொடுத்தே பழகிய தாமஸ், தாம் இறந்தபின்பும், தனது இறுதிச்சடங்கின்போதும் வானத்திலிருந்து கொட்டிக் கொடுத்த விடயம் மக்களை மகிழவும் நெகிழவும் வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |