சென்னை வெள்ளத்தில் சாலையை கடந்த முதலையை பிடித்த வனத்துறையினர்?
சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
வெள்ளத்தில் முதலை
கடந்த வாரம் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளானர்.
அப்போது, சென்னை பெருங்களத்தூர் பகுதியில் முதலை ஒன்று தென்பட்டது. இரவு நேரத்தில் முதலை ஒன்று சாலையை கடக்கும் மாதிரியான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த முதலை பயப்படக்கூடிய வகையை சார்ந்தது என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
தற்போது, சென்னையில் மழைநீர் வெள்ளம் குறைந்து வரும் நிலையில் முதலையின் நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதலையை பிடித்த வனத்துறையினர்
இந்நிலையில், ஆலப்பாக்கம் மப்பேடு சாலையில் இந்திய விமான நிலையம் சுற்றுச்சுவர் அருகே முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த முதலை பெருங்களத்தூர் பகுதியில் காணப்பட்ட முதலையா அல்லது வேறு முதலையா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலை நெற்குன்றம் ஏரியில் இருந்து வந்திருக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
சென்னையில் பெய்த கனமழையின் போது பெருங்களத்தூர் சாலையில் உலா வந்த
— k.Thirunavukarasu (@ThirunaAras) December 13, 2023
முதலை ? சிக்கியது...!#perungalathur | #Crocodile | #Tambaram | #CycloneMichuang pic.twitter.com/feQy51qSRl
தற்போது, பிடித்திருக்கும் முதலையை கிண்டி பூங்காவிற்கு கொண்டு செல்வதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகைப்படங்களை ஒப்பீடு செய்து இறுதி முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |