திருமணத்தன்று மொத்த குடும்பத்தையும் மின்னலுக்கு பறிகொடுத்த நபர்: கலங்கடிக்கும் பின்னணி
வங்கதேசத்தில் திருமணத்திற்காக படகில் சென்ற 16 பேர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவத்தில், தொடர்புடைய நபர் ஒருவர் முதன்முறையாக தமக்கு நேர்ந்த துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உறவினர்கள் 16 பேர்களை அடக்கம்
21 வயதேயான மாமுன் தனது திருமணத்தன்று, தந்தை உட்பட தமது நெருங்கிய உறவினர்கள் 16 பேர்களை அடக்கம் செய்துள்ளார். சம்பவத்தன்று புத்தாடை உடுத்தி பெரும் மகிழ்ச்சியுடன் மாமுன் குடும்பத்தினர் 16 பேர்கள் படகில் புறப்பட்டுள்ளனர்.
ஆனால் திடீரென்று புயலில் சிக்க, கன மழையில் படகு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து மாமுன் குடும்பத்தினர் ஆற்றங்கரையில் தகர கொட்டகை ஒன்றில் ஒதுங்கியுள்ளனர்.
இந்த நிலையிலேயே மின்னல் ஒன்று இவர்களின் தகர கொட்டகை மீது தாக்கியுள்ளது. இதில் 16 பேர்களும் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் ஆண்டுக்கு சராசரியாக 300 பேர்கள் மின்னல் தாக்கி பலியாகி வருகின்றனர் என்றே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2021 ஆகஸ்டு மாதம் நடந்த சம்பவம் தொடர்பில் மாமுன் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். 21 வயதேயான மாமுன் வடமேற்கில் உள்ள ஷிப்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
கொண்டாடும் மனநிலையில் இல்லை
அப்போது தான் மொத்தமாக உலுக்கிய அந்த தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். மாமுன் தனது தந்தை உட்பட நெருக்கமான உறவினர்கள் 16 பேர்களை மொத்தமாக இழந்திருந்தார்.
Credit: Salman Saeed
திருமணப் பந்தலிலேயே சடலங்கள் நிரத்தப்பட்டு, அன்று மதியத்திற்கு பின்னர் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாமுன் பின்னர் திருமணம் செய்து கொண்டாலும், தமது திருமண ஆண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றே மாமுன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாசா, ஐ.நா மன்றம் மற்றும் வங்கதேச அரசாங்கம் ஆகியவை முன்னெடுத்த ஆய்வில், காலநிலை மாற்றத்தின் காரணமாக புயல்கள் அதிகரித்து, இதன் காரணமாக கொடிய மின்னல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |