இளவரசர் ஆண்ட்ரூ முதல் மைக்கேல் ஜாக்சன் வரை... இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்
அமெரிக்காவில், ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த கோடீஸ்வரர் ஒருவர் அளித்த விருந்துகளில் பங்கேற்ற பிரபலங்கள் பலருடைய பெயர்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியவந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இளவரசர் ஆண்ட்ரூவால் அவமானம்
சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்து விருந்தினர்களுக்கு இரையாக்கிவந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவரது காதலி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல். அப்படி எப்ஸ்டீனுடைய மாளிகையில் விருந்துக்குச் சென்றவர்களில் ஒருவர், இளவரசர் ஆண்ட்ரூ.
Source: The Sun
ஜெஃப்ரி எப்ஸ்டீன் கொடுத்த விருந்து ஒன்றில் பங்கேற்ற இளவரசர் ஆண்ட்ரூ, ஜெஃப்ரியின் பாலியல் அடிமையாக இருந்த தன்னுடன் மூன்று முறை பாலுறவு வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார் விர்ஜினியா.
இந்த தகவல் வெளியாகி பிரித்தானியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, ராஜ குடும்பம், அவமானத்தில் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.
அதிர்ச்சியூட்டும் பெயர்ப் பட்டியல்
இந்நிலையில், தன்னை ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய பாலியல் அடிமையாக்கிய அவரது காதலி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் மீது விர்ஜினியா தொடுத்த வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட, நீதிபதியான Loretta Preska என்பவர் அனுமதியளித்துள்ளார்.
அவ்வகையில், அந்த வழக்கில் தொடர்புடைய, அல்லது ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் எல்லாருமே பாலியல் குற்றவாளிகள் அல்ல. ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள், அவருடைய அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவரது விருந்தினர்கள் பெயரும் அந்த பட்டியலில் அடக்கம்.
9RMS1L
என்றாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள் அதிர்ச்சியை அளிப்பவையாக உள்ளன. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், நடிகைகள் கேட் ப்ளாஞ்சட், கேமரான் டயஸ், மொடலான நவோமி கேம்பல், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப்,
From the the Epstein files unsealed:
— unusual_whales (@unusual_whales) January 4, 2024
Question, to a witness: "Did Jeffrey ever talk to you about Bill Clinton?"
Answer: "He said one time that Clinton likes them young, referring to girls." pic.twitter.com/szVUJtPqgE
டைட்டானிக் புகழ் நடிகர் லியனார்டோ டிகேப்ரியோ, பாப் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி, புரூஸ் வில்லிஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ ஆகிய பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Stephen Hawking allegedly participated in an underage orgy. pic.twitter.com/SfoUcrFeTU
— Anonymous (@YourAnonOne) January 4, 2024
Image: MEGA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |