வாஷிங்டன் வானில் திடீரென பயங்கர சத்தத்துடன் பறந்த போர் விமானம் - பதறிய மக்கள்
வாஷிங்டன் வானில் திடீரென பயங்கர சத்தத்துடன் பறந்த போர் விமானத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
வாஷிங்டன் வானில் வட்ட மடித்த விமானம்
அமெரிக்கா, வாஷிங்டன் வானில் நேற்று மதியம் சந்தேகத்திற்கிடமான ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ என்ற விமானம் பறந்தது. உடனடியாக இதை அறிந்த அதிகாரிகள் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், பதில் ஏதும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அதிகாரிகள் முயற்சி செய்தும் பலனில்லை. இதனையடுத்து, அந்த விமானத்தை பிடிக்க அமெரிக்க போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் பறந்தது.
பயங்கர சத்தத்துடன் விரைந்த போர் விமானம்
அப்போது பயங்கர சத்தத்துடன் மின்னல் வேகத்தில் விமானம் செல்ல, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், இதனால் பரபரப்பானது.
இறுதியாக ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ விமானம் வாஷிங்டன் வான் எல்லையிலிருந்து விலகி மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் பின்பு, உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசாரும், ராணுவ வீரர்களும் விரைந்தனர். அந்த விமானத்தில் யாரெல்லாம் பயணம் செய்தனர். யாராவது உயிரிழந்துள்ளரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்க போர் விமானங்கள் ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ விமானத்தை பிடிக்க பறந்தபோது, அந்த விமானம் அமெரிக்க போர் விமானத்தின் மீது மோத வந்ததாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
A Cessna Citation private jet crashed in SW Virginia this afternoon, “pilot unresponsive.” NORAD confirms the flight busted Washington DC restricted airspace; F-16s scrambled and went supersonic in pursuit, causing a sonic boom heard in the nation's capital. pic.twitter.com/ia5OQXwCql
— DC Poll Guru ? (@dcbat) June 4, 2023