திருமணமான 2 மாதத்திலே ஏமாற்றினேனா? - தனஸ்ரீ குற்றச்சாட்டுக்கு சாஹல் விளக்கம்
திருமணமான 2 மாதத்திலே ஏமாற்றியதாக தெரிவித்த குற்றச்சாட்டுக்கு சாஹல் விளக்கமளித்துள்ளார்.
சாஹல் மீது குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டாக்டர், யூடியூபர் மற்றும் நடன இயக்குநரான தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். சாஹல் ஜீவனாம்சமாக ரூ.4.75 கோடியை தனஸ்ரீக்கு வழங்கினார்.
சமீபத்தில் இந்த விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "சாஹல் திருமணமான 2 மாதத்திலே என்னை ஏமாற்றினார். திருமண உறவு நீடிக்க வேண்டும் என நான் பொறுமையாக இருந்தேன் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சாஹல் விளக்கம்
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரர். நான் யாரையும் ஏமாற்றவில்லை. 2 மாதத்திலே நான் ஏமாற்றியதை கண்டுபிடித்திருந்தால் இந்த உறவு எப்படி இவ்வளவு காலம் நீடித்திருக்கும்?
அந்த அத்தியாயம் முடிந்து விட்டது. நான் அதை கடந்து, முன்னேறி செல்ல விரும்புகிறேன். மற்றவர்களும் அவ்வாறு இருக்க விரும்புகிறேன். நான் என் வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த உள்ளேன். இது குறித்து இனிமேல் பேச வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |