தமிழகத்தில் இன்று தூத்துக்குடி உட்பட 9 மாவட்டங்களில் மழை- வானிலை மையம் தாவல்
தமிகத்தில் இன்று தூத்துக்குடி உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பெய்து வருகிறது.
சென்னையில் வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கத்தைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், பருவமழை தொடரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Representative Photo/HT
இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Lenin Iniyan/TOI, BCCL
இந்நிலையில், தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி, தேனி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ஏற்கனவே பெய்த கனமழை பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |