அப்பா தவறு செய்திருக்க மாட்டார்! சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தவறு செய்திருக்க மாட்டார் என, அவரது மகனிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. இவர் ஆந்திராவில், கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சில ஆண்டுகளாக இதற்கான விசாரணையை சி.ஐ.டி நடத்தி வந்த நிலையில், சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்பு, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, 14 நாள்கள் சந்திரபாபு நாயுடுவை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் கடந்த 10ம் தேதி நள்ளிரவு 1 மணி ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி சந்திரபாபு நாயுடுவுக்கு ஏசி படுக்கை வசதி, தனி கழிப்பறை, நாளிதழ்கள், தொலைக்காட்சி, வீட்டு சாப்பாடு, தனி உதவியாளர் ஆகிய வசதிகள் சிறையில் வழங்கப்பட்டன.
ரஜினிகாந்த் ஆறுதல்
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்" என குற்றம் சாட்டியிருந்தார்.
அந்தவகையில், சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளருமான லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர்,"சந்திரபாபு நாயுடு தவறு செய்திருக்க மாட்டார். தன்னலமற்ற பொது சேவை அவரை காப்பாற்றும்" என ஆறுதல் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |