விமானத்திற்குள் முகக்கவசம் போட மறுத்து அமர்க்களம் செய்த பயணிகளுக்கு நேர்ந்த கதி!
அமெரிக்காவில் விமானத்திற்குள் முகக்கவசம் போட மறுத்த 14 பயணிகளுக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது விமானங்களில் பயணிப்பதற்கு தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு பயணிகளும் விமானத்தில் ஏறும் போது, பறக்கும் மற்றும் இறங்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இந்நிலையில், வாஷிங்டன் டி.சி.யில் இருந்து Seattle பயணித்த விமானத்தில் சில பயணிகள் முகக்கவசம் அணிய மறுத்து, விமானக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவமரியாதை செய்ததாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானப் பணியாளர்களை துன்புறுத்தியது மற்றும் முகக்கவசம் அணிய மறுத்த 14 பயணிகளை அதன் விமானங்களில் பயணிக்க தடை விதித்துள்ளது.
எங்கள் விமானத்தில் அல்லது நாங்கள் சேவை செய்யும் எந்த விமான நிலையத்திலும் எந்தவொரு இடையூறும் ஏற்படுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.