சேட்ஜிபிடி வழங்கிய பயண ஆலோசனை - விமான நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சிக்கல்
ChatGPT போன்ற AI சேட்பாட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
மாணவர்கள் வீட்டுப்பாடம் தொடங்கி ஐடி ஊழியர்கள் கோடிங் எழுதுவது வரை பலரும் தங்களின் பணியை எளிமையாக முடிக்க சேட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சில நேரங்களில் சேட்ஜிபிடி தவறான ஆலோசனைகளை வழங்கி அதனால் சிலர் சிக்கலிலும் மாட்டியுள்ளனர். சேட்ஜிபிடி சில நேரம் தவறான தகவல்களையும் வழங்கக்கூடும் என அதன் உரிமையாளரான சாம் அல்ட்மேனும் முன்னரே எச்சரித்துள்ளார்.
விமான நிலையத்தில் நேர்ந்த சிக்கல்
அதேபோல், சேட்ஜிபிடியின் ஆலோசனையை கேட்டு செயல்பட்ட பெண்ணுக்கு விமான நிலையத்தில் நேர்ந்த சிக்கலை பார்க்கலாம்.
ஸ்பெயினை சேர்ந்த Mery Caldass என்ற பெண், சமூக வலைத்தளங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமான பின்தொடர்பவர்களுடன் உள்ளடக்க படைப்பாளராக உள்ளார்.
இவர் தனது விடுமுறையில், தனது காதலர் Alejandro Cid உடன் அமெரிக்காவின் Puerto Rico தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிருந்தார்.
இதற்காக சேட்ஜிபிடியின் ஆலோசனையை கேட்ட அவர், அதன்படி விமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்தையும் முன்பதிவு செய்து விட்டார்.
அதன் பின்னர், விமான நிலையத்தில் Check-in செய்ய சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
விமான நிலைய ஊழியர்கள், Puerto Rico தீவிற்கு செல்ல ESTA விசா தேவை, அது இல்லாமல் விமானத்தில் ஏற முடியாது என தெரிவித்துள்ளார்.
தவறான விசா ஆலோசனை
முன்னதாக சேட்ஜிபிடியிடம் அவர் ஆலோசனை கேட்ட போது, ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் Puerto Rico தீவிற்கு செல்ல விசா தேவை இல்லை என தெரிவித்துள்ளது. அதனை நம்பி, விமானம் ஏற சென்றவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
விதிப்படி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விசா தேவை இல்லை. அதேவேளையில், பயணத்திற்கு முன்னதாக மின்னணு விசா எனப்படும் ESTA பெற வேண்டும். சேட்ஜிபிடி இந்த தகவலை தெரிவிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, சேட்ஜிபிடியை அந்த பெண் அழுதுகொண்டே திட்டுவதும், அவரது காதலர் அவரை சமாதானப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
🔴 FLASH | 🗣️ « Je lui ai demandé, et il m’a dit que non ! Il se venge parce que je l’ai insulté Je ne fais plus confiance à ce fils de p*te » en parlant de... ChatGPT. 🫢
— SIRÈNES (@SirenesFR) August 17, 2025
😭En pleure, l'influenceuse Mery Caldass et son compagnon dénonce ChatGPT à qui elle a confié… pic.twitter.com/ZhIokofNKp
அதில் பேசிய அவர், "நான் எப்போதும் நிறைய ஆராய்ச்சி செய்வேன். ஆனால், சேட்ஜிபிடியிடம் இது பற்றி கேட்டேன். அது இல்லை என கூறியது. இனி நான் அதை நம்ப மாட்டேன். நான் அதை சில நேரங்களில் திட்டுவேன். அதன் காரணமாக அது என்னை பழிவாங்கி விட்டது." என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அவர் தவறான கேள்வியை கேட்டிருக்கலாம், சேட்ஜிபிடியிடம் கேட்டதோடு மட்டுமில்லாமல் அதிகாரபூர்வ இணையதளத்திலும் சரிபார்த்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |