மருதாணியில் வெடிப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் அமிலம் - எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை
தெலுங்கானா மாநிலத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் போலி மருதாணி கோன் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுதாகவும் இதனால் உடல் நல பிரச்சினை ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி மருதாணி விற்பனை
பெண்கள் தற்போது அதிகளவில் மருதாணி கோன்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
முந்தைய காலங்களில் வீட்டில் இருக்கும் மருதாணி இலைகளை அரைத்து மருதாணி வைப்பது வழக்கம். அதனால் தோல் சார்ந்த பிரச்சினைகள் ஒன்றும் ஏற்படவில்லை.
ஆனால் தற்போது பல நிறுவனங்கள் இவ்வாறு போலி மருதாணியை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.
அந்தவகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள மெகதி பட்டினத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் போலியாக செய்து விற்பனை செய்வதாக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மருதாணி கோன்களை கைப்பற்றி சோதனை நடத்தியுள்ளனர்.
மேற்கொண்ட சோதனையின் முடிவில் அதில் பிக்ரமிக் அமிலம் என்ற செயற்கை சாயத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் அந்நிறுவனமானது அனுமதியில்லாம் இயங்கும் நிறுவனமாகும். விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இதில் பயன்படுத்தப்பட்ட அமிலமானது வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும் மருத்து வத்துறையில் சில மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் அமிலமாகும்.
இதை கையில் வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள அமிலம் உணவு வழியாக உடலிற்குள் சென்று உடல் நலத்தை முற்றிலும் பாதிக்கும்.
மேலும் இச்சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |