மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை.., 8 மாதங்களிலேயே இடிந்து சுக்கு நூறானது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த நிலையில் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
இடிந்து விழுந்த சிலை
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டில் திறந்து வைத்தார். இந்த சிலையின் உயரம் 35 அடியாகும்.
கடந்த 3 நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை பெய்தும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி முழுமையாக உடைந்து கீழே விழுந்தது. இதில், தலை, கை, கால் என அனைத்து பாகங்களும் விழுந்து சிதறின.
இந்த சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளது.
அந்த பதிவில், "பாஜகவின் ஆட்சியின் ஊழல் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது. மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது.
BJP सरकार में भ्रष्टाचार चरम पर है।
— Congress (@INCIndia) August 26, 2024
नरेंद्र मोदी ने 4 दिसंबर, 2023 को महाराष्ट्र के राजकोट में छत्रपति शिवाजी महाराज की प्रतिमा का अनावरण किया।
अब करीब 8 महीने बाद छत्रपति शिवाजी महाराज की प्रतिमा ढह गई।
हालात ये हैं कि भ्रष्टाचार के मामले में महापुरुषों को भी नहीं बख्शा जा… pic.twitter.com/KLSy4Jkr8S
பாஜகவின் ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை" என்று பதிவிட்டுள்ளது. மேலும், சிலை இடிந்து விழுந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |