ஜிலேபியை லஞ்சமாக கேட்ட பொலிஸ் அதிகாரி! இதற்கு முன்பு உருளைக்கிழங்கு
மொபைல் போனை காணவில்லை என்று புகாரளிக்க வந்த நபரிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜிலேபியை லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சமாக ஜிலேபி
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோவில் உள்ள பாஹதுர்கார் காவல் நிலைய வட்டத்திற்குள் வரும் கிராமம் கனௌர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 24 -ம் திகதி மருந்து வாங்க சென்ற இடத்தில் தனது மொபைல் போனை தவறவிட்டுள்ளார். பின்னர், எங்கு தேடியும் தனது செல்போனை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், காவல் நிலையத்திற்கு சென்று தனது மொபைல் போனை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அப்போது, குமார் கூறிய புகாரை அந்த பொலிஸ் அதிகாரி முழுமையாக கேட்டுக் கொண்டார். பின்னர், அவரிடம் மொபைல் போனை விரைவில் கண்டுபிடித்து தருகிறோம் என்று கூறுவதற்கு பதிலாக, முதலில் கடைக்குச் சென்று சூடான பாதுஷா அல்லது ஜிலேபி ஆகியவற்றில் ஒரு கிலோ வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, கடைக்கு சென்று ஜிலேபியை வாங்கி வந்து கொடுத்த பின்னர் குமாரின் புகாரை பொலிஸார் பதிவு செய்தனர்.
இதற்கு முன்னதாக, காவலர் ஒருவர் பணியில் இருக்கும்போது உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்டதற்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |