வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆற்றுப்பாலம்!
சத்தீஸ்கரில் ₹16 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆற்றுப் பாலம்
சத்தீஸ்கர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சில்லி மற்றும் நான்கட்டி கிராமங்களை இணைக்கும் வகையில் துர்க் மாவட்டத்தில் உள்ள சாக்னி காட் என்ற இடத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.
ஷிவ்நாத், ஆம்னர் மற்றும் சாக்னி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடம் என்பதால் திரிவேணி சங்கம் என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது.
துர்க் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக மொக்ரா நீர்த்தேக்கத்தில் இருந்து சிவநாத் ஆற்றில் 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் ₹ 16.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
छत्तीसगढ़ के दुर्ग़ ज़िले में पुल बनाने का स्ट्रक्चर गिरा, इसकी क़ीमत 16 करोड़ रुपए थी
— News24 (@news24tvchannel) June 29, 2023
Chhattisgarh Bridge Collapse | #Chhattisgarh | #ChhattisgarhBridgeCollapse pic.twitter.com/WC9S3w2O3v
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |