சொந்தமாக கார் கூட இல்லாத முதலமைச்சர் இவர் தான்: தேர்தல் மனுவில் வெளியான தகவல்
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த மனுவில் சொந்தமாக தமக்கு கார் கூட இல்லை என குறிப்பிட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
கார் இல்லை
இந்திய மாநிலம், தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30 -ம் திகதி நடைபெற இருக்கிறது. இதனால், நேற்று தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேர்தல் மனு தாக்கல் செய்தார்.
அப்போது, அவர் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், தான் ஒரு பி.ஏ பட்டதாரி என்றும், விவசாயி என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் வருவதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் கூறியிருந்தார்.
சொத்துக்கள்
அதுமட்டுமல்லாமல், "தனது பெயரில் ரூ.17.83 கோடியில் அசையா சொத்துக்களும், மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளது. தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி இருக்கிறது.
கடந்த மார்ச் 31 -ம் திகதி வரை ஆண்டுக்கு ரூ.1.60 கோடி எனவும், ரூ.17 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |