640 கி.மீ தொலைவு... ஐரோப்பா நோக்கி கடலில் நீந்திய 54 புலம்பெயர் சிறார்கள்
கொந்தளிப்பான கடல் மற்றும் மூடுபனிக்கு மத்தியில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டாவிற்கு, குறைந்தது 54 சிறார்களும் 30 பெரியவர்களும் நீந்திச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
642 கி.மீ தொலைவு
தகவலை அடுத்து மீட்கும் முயற்சியில் சிவில் காவல்படை களமிறங்கியதாகவும், சிலர் நீந்திக் கடலோரப் பகுதிக்குச் சென்றதாகவும் ஸ்பெயின் நாட்டின் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் பெரும்பாலும் மொராக்கோவைச் சேர்ந்த சிறார்கள் என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள், சியூட்டாவில் உள்ள தற்காலிக மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்குள்ள அதிகாரிகள் பெடரல் அரசாங்கத்தின் உதவியைக் கோரினர்.
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டாவிற்கு சாலை ஊடாகப் பயணப்பட 642 கி.மீ தொலைவு என்றே கூறப்படுகிறது. ஆனால் கடலில் சிறார்கள் உட்பட பலர் நீந்த எடுத்த முடிவு ஆபத்தின் உச்சம் என்றே கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகத்து 26ம் திகதி மொராக்கோவிலிருந்து சியூட்டாவிற்கு நீந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அடர்ந்த மூடுபனியைப் பயன்படுத்திக் கொண்டதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்படுவார்கள்
2021ல், ஒரு சிறுவன் சியூட்டாவை அடையும் முயற்சியில் வெற்று பிளாஸ்டிக் பொத்தல்களில் மிதப்பதைக் கண்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டான்.
மொராக்கோவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஸ்பெயினின் இரண்டு பகுதிகளான சியூட்டா மற்றும் மெலிலாவைக் கடக்கும் போது தடுக்கப்படும் மொராக்கோ நாட்டவர்கள், வயது குறைந்தவர்களாகவோ அல்லது புகலிடம் கோருபவர்களாகவோ இல்லாவிட்டால், உடனடியாக மொராக்கோவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
பிற நாட்டவர்கள் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள், அங்கு அவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்படுகிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 2,000 புலம்பெயர்ந்தோர் எல்லை வேலியைத் தள்ளிக்கொண்டு மெலிலாவுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 23 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |