கொன்று தள்ளுங்கள்... ரஷ்ய தளபதியின் நடுங்க வைக்கும் உத்தரவு: 5,000 பேர் படுகொலையின் பின்னணி
உக்ரைனின் அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்க இராணுவ தளபதிகள் ரஷ்ய துருப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நடுங்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் உளவு அமைப்புகள் ரஷ்ய இராணுவத்தின் இரகசிய வானொலி தகவல்களை இடைமறித்துள்ளது. இந்த நிலையிலேயே ரஷ்ய தளபதிகளின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், அப்பாவி மக்களே எஞ்சியுள்ளனர் என இராணுவத்தினர் தளபதிக்கு எடுத்துக்கூறியும், அவர் அதை பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் 5,000 அப்பவி மக்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் நடந்த சம்பவமே தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளில் தொடர் பீரங்கி தாக்குதல்களால், வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட 150,000 மக்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதலில் மொத்தம் 5,000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதி என இராணுவ வீரர்கள் அதிகாரிகளுக்கு பதிலளித்தும், கொன்று தள்ளுங்கள் என்றே உத்தரவிட்டுள்ளார் அந்த தளபதி. ஆனால் உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய அந்த பதிவுகள், உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மக்கள் மீண்டும் கீவ் நகருக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் ரஷ்ய உளவாளிகள் பொதுமக்கள் போன்று ஊடுருவி ஏவுகணைகளுக்கான கருவிகளை சேதப்படுத்த முயற்சிக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டுமின்றி, ரஷ்யா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது என்ற அச்சத்தின் மத்தியில், உக்ரைனின் தூர கிழக்கில் மக்களை வெளியேறும்படி இராணுவ அதிகாரிகள் கோரியுள்ளனர்.