சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி மக்களுக்கு கோவிட் பாதிப்பு!
சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி மக்களுக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இந்த வாரம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகின் மிகப்பெரிய கோவிட் பாதிப்பு என்பதால், உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன சுகாதார சீராக்கி அதன் மதிப்பீட்டை எவ்வாறு கொண்டு வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் நாடு இந்த மாத தொடக்கத்தில் எங்கும் காணப்பட்ட PCR சோதனைச் சாவடிகளின் நெட்வொர்க்கை மூடியுள்ளது.
3.7 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு!
reuters
சீனா கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. மேலும், சீனாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதமும் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, அந்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் இருந்ததால், இந்த பிஎப் 7 வைரஸ் வீரியம் கொண்டு பரவத் தொடங்கியிருக்கிறது.
இந்த வாரத்தில், ஒரு நாளில் மட்டும் நாள் ஒன்றுக்கு 3.7 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை!
டிசம்பர் மத்தியில் இருந்து ஜனவரி பிற்பகுதி வரையில் தற்போது சீனாவில் பரவும் இந்த கொரோனா அலையின் உச்சம் இருக்கும் என்றும் சீனாவின் உயர்மட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒருநாள் பாதிப்பு மட்டும் சுமார் 3.7 கோடியாக பதிவாகியிருக்கும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
புதன்கிழமை நடைபெற்ற சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் உள் கூட்டத்தின் நிமிடங்களின்படி, டிசம்பர் முதல் 20 நாட்களில் 248 மில்லியன் (24.8 கோடி) மக்கள் அல்லது கிட்டத்தட்ட 18% மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அதிகாரப்பூர்வ தொற்று எண்ணிக்கை?
இது மட்டும் துல்லியமான தகவலாக இருந்தால் கடந்த ஜனவரி மாதம் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பேருக்கு பதிவாகி இருந்த முந்தைய எண்ணிக்கையை தாண்டிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் சீனாவோ உண்மையான தகவலை குறைத்து வெளியிடுவதாகவும் ஒருபக்கம் விமர்சனங்கள் உள்ளன.
அதாவது நாள் ஒன்றுக்கு 3.7 கோடி பாதிப்பு பதிவாகி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்ட டிசம்பர் 20-ஆம் திகதி சீனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ பாதிப்பு எண்ணிக்கை என்பது வெறும் 3,049 மட்டுமே.