கொரோனா பரவலுக்கு முன்னரே தடுப்பூசி தயாரிக்க களமிறங்கிய சீனா: வெளியான புதிய அறிக்கை
கொரோனா பெருந்தொற்று தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகும் முன்னரே சீனா அதற்கான தடுப்பூசி தயாரிக்க களமிறங்கியதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 நவம்பர் நடுப்பகுதியில் தடுப்பூசி
அமெரிக்க செனட்டால் தொகுக்கப்பட்ட 300 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றில் தொடர்புடைய பல்வேறு தரவுகள் அம்பலமாகியுள்ளது. குறித்த அறிக்கையில், சீன ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பர் நடுப்பகுதியில் தடுப்பூசி திட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினர் என கண்டறியப்பட்டுள்ளது.
@reuters
ஆனால் கொரோனா பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு டிசம்பர் 31ம் திகதி அறிவிக்கும் வரையில் சீனா தரவுகளை அழிக்கவே முயற்சி மேற்கொண்டுள்ளதாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வூஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட தவறு காரணமாகவே கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு என குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவின் இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியில் பணியாற்றிய முதன்மை ஆய்வாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை பிப்ரவரி 24, 2020 அன்று தாக்கல் செய்துள்ளார்.
@getty
மரபணு வரிசை தேவைப்படும்
பொதுவாக அப்படியான ஒரு கட்டத்திற்கு எட்ட வேண்டும் என்றால் மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் வரையில் தேவைப்பட்டிருக்கும் எனவும், அப்படியெனில் அந்த ஆராய்ச்சியாளர்கள் நவம்பர் மாதத்தில் இருந்தே தடுப்பூசி பணிகளை துவங்கியிருக்க வேண்டும் எனவும், அதுவும் கொரோனா தடுப்பூசி தொடர்பான தரவுகளை சீனா வெளியிடும் ஒரு மாதம் முன்னர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஒன்றை தயாரிக்க பாதிக்கப்பட்டவரின் முழு மரபணு வரிசை தேவைப்படும். ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவரின் முழு மரபணு வரிசையானது 2020 ஜனவரி 11ம் திகதி தான் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
@getty
இதனால், கொரோனா பாதித்த நபர் அல்லது விலங்கு ஒன்றின் முழு மரபணு வரிசையை சீன ஆய்வாளர்கள் முன்னரே கைப்பற்றியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.