பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணை கட்டும் சீனா - இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன?
இந்தியாவின் எல்லைக்கு அருகில் திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில், 137 பில்லியன் டாலர்கள் செலவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றில் உலகின் மிகப்பெரிய அணை
பிரம்மபுத்ராவின் திபெத்தியப் பெயரான யர்லுங் சாங்போ ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின்சாரத் திட்டத்தைக் கட்ட சீன அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா நதி அருணாச்சலப் பிரதேசத்துக்கும் பின்னர் வங்காளதேசத்துக்கும் U-turn செய்யும் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் குறித்த அணையானது கட்டப்படவுள்ளது.
அணையின் மொத்த முதலீடு ஒரு டிரில்லியன் யுவானை (137 பில்லியன் அமெரிக்க டொலர்) தாண்டலாம், இது சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை உட்பட ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தென் சீனா அணை உட்பட உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகப்பெரியதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய 1.5 பில்லியன் டாலர் ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.
தற்போது 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
சீனா அணையை கட்டிவிட்டால் பிரம்மபுத்திரா நதி மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடும்.
எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பிருப்பதால் இந்தியா கவலைக் கொண்டுள்ளது.
மேலும் அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணைக்கட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |