உலகிலேயே நீளமான எஸ்கலேட்டர்: எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது தெரியுமா?
உலகிலேயே நீளமானது என அழைக்கப்படும் எஸ்கலேட்டர் ஒன்று, சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே நீளமான எஸ்கலேட்டர்
சீனாவிலுள்ள Wushan என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3,000 அடி நீளம் கொண்ட எஸ்கலேட்டரின் இன்னொரு சிறப்பம்சம், அது திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்கலேட்டர் 800 அடி உயரம் வரை மக்களை சுமந்து செல்கிறது. அதாவது, ஒரு 80 மாடிக் கட்டிடத்தின் உயரத்துக்கு என்று கூறலாம்.
அத்துடன், எஸ்கலேட்டரின் ஒரு முனையில் ஏறினால், மறு முனையைச் சென்றடைய 20 நிமிடங்கள் ஆகிறதாம்.

இன்னொரு வகையில் கூறினால், போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் சாலையில் பயணித்தால் ஒரு மணி நேரம் பிடிக்கும் பயணம், இந்த எஸ்கலேட்டரில் சென்றால் 20 நிமிடங்களில் முடிந்துவிடும்.
Chongqing Wushan Goddess Escalator: 905m of Mountain-Scaling Thrill! 🚀
— iChongqing (@iChongqing_CIMC) February 15, 2026
A must-do for any thrill-seeker visiting Chongqing! 🏔️#Chongqing #MountainCity #VerticalCity #ThrillRide #TravelChina https://t.co/rb0uepA1Zw pic.twitter.com/cy0uloA32l
இந்த எஸ்கலேட்டரை உருவாக்கி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆனதாம். அதற்கான செலவு 23 மில்லியன் டொலர்கள்!
இந்த எஸ்கலேட்டரை உருவாக்கியுள்ள Schindler China என்னும் நிறுவனம், ஏற்கனவே 1,400 எஸ்கலேட்டர்களை நகரம் முழுவதும் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |