சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு விபத்து: 11 பேர் பலி, 11 பேர் படுகாயம்
வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நிலக்கரி சுரங்க விபத்து
திங்கட்கிழமை இரவு 8.26 மணிக்கு சீனாவின் யான் நகருக்கு அருகே உள்ள Xintai நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது என முனிசிபல் அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பாளரான CCTV தெரிவித்துள்ளது.
வடக்கு சீனாவின் சாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என செவ்வாய்க்கிழமை வெளியான ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் விபத்து ஏற்பட்ட போது 90 பேர் வரை நிலக்கரி சுரங்கத்தில் இருந்ததாகவும், உயிரிழந்தவர்கள் தவிர மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாநில ஒளிபரப்பாளரான CCTV தெரிவித்துள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |