தூக்கமின்மையால் அவதிப்பட்ட காதலி! 6 மணி நேரத்திற்குள் 20 முறை மயக்க மருந்து செலுத்தி கொன்ற சீன மருத்துவர்
தூக்கமின்மையால் அவதிப்பட்ட காதலிக்கு அதிக அளவிலான மயக்க மருந்து செலுத்தி காதலன் செய்த ஆபத்தான சோதனை விபரீதத்தில் முடிந்துள்ளது.
விபரீதத்தில் முடிந்த மருத்துவ சிகிச்சை
சீனாவில் மயக்கவியல் நிபுணர் ஒருவர் தனது காதலியின் தூக்கமின்மையை சிகிச்சை செய்யும் பெயரில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொன்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வலுவான கண்டனம் பெற்று வருகிறது.
கு(Qu) என்கிற புனைபெயரால் அடையாளம் காட்டப்படும் இந்த மருத்துவர், சீனாவின் சிச்சுவான்(Sichuan) மாகாணத்தில் ஜியாஜியாங்(Jiajiang) மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியான சென்(Chen) என்ற பெயரில் அடையாளம் காட்டப்படும் அவரது காதலியை 2022 ஆம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தளத்தின் மூலம் கு(Qu) சந்தித்துள்ளார்.
சென்னுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்து வந்த நிலையில், கு(Qu) பொதுவான மருத்துவ ஆலோசனை வழங்காமல் மார்ச் 6, 2024 அன்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பலமுறை ப்ரோபோபோல்(propofol) என்ற வலிமையான மயக்க மருந்தை காதலி சென்-நுக்கு செலுத்தியுள்ளார்.
மிகவும் அசாதாரணமான முறையில் சென்னின் கணுக்காலில் கிட்டத்தட்ட 1,300 மில்லிகிராம் வரை வலிமையான மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில், இறுதியில் அது காதலி சென்னின் மரணத்துக்கு வழிவகுத்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும், சென் அளவுக்கு அதிகமான புரோபோபோல் விஷத்தால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரிய மருத்துவர்
பொலிஸார் விசாரணையில் மருத்துவர் கு(Qu) தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
அத்துடன் காதலி சென்னின் குடும்பத்திற்கு 400,000 யுவான் (US$55,000) வரையிலான தொகையை வழங்கி மன்னிப்பு கோரியுள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கண்டனம் மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |