பில்லியன் டொலர் வர்த்தகம்... அவுஸ்திரேலிய பார்லி மீதான வரியை கைவிட்ட நாடு
பல பில்லியன் டொலர் வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பார்லி மீதான வரியை கைவிடுவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் முடிவை வரவேற்ற பிரதமர்
சீனாவின் இந்த முடிவை அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரவேற்றுள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பில் முன்னெடுத்துள்ள வழக்கை நிறுத்தி வைப்பதாகவும் அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
@getty
இறக்குமதி வரியை கைவிடும் நடவடிக்கையானது சனிக்கிழமை முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவின் பார்லி சந்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பார்லி மீது வரிகளை தொடர்ந்து விதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி விதிக்கப்படுவதற்கு முன்னர் ஆண்டுக்கு 620 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு சீனாவுக்கு பார்லி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2020ல் திராட்சை மது, பார்லி மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீது சீனா வரி விதித்தது.
திராட்சை மது மீதான வரியையும்
தற்போது பார்லி மீதான வரியை கைவிட்டுள்ளது போன்று திராட்சை மது மீதான வரியையும் சீனா நிர்வாகம் கைவிட வேண்டும் என அவுஸ்திரேலியா கோரிக்கை வைத்துள்ளது.
@bloomberg
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் மற்றொரு அடையாளமாக, சீனாவின் புதிய வெளிவிவகார அமைச்சரை நாட்டிற்கு வருமாறு அவுஸ்திரேலியா இந்த வாரம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |