முதுகுவலியால் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய 82 வயது மூதாட்டி - அடுத்து நடந்தது என்ன?
கிழக்கு சீனாவை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற மூதாட்டி, கீழ் முதுகு வலியால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி
தவளைகளை உயிருடன் விழுங்கினால், முதுகு வலி குணமாகும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய அவர், அதனை முயற்சித்து பார்க்க முடிவெடுத்துள்ளார்.
ஆனால், இந்த திட்டத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் தவளைகளை உயிருடன் பிடித்து வருமாறு கூறியுள்ளார்.
அவர்கள் பிடித்து வந்த அனைத்து தவளைகளும் உள்ளங்கை அளவே இருந்துள்ளது.
அதன் பின்னர் அவர்களுக்கு தெரியாமல், முதல் நாள் 3 தவளைகளையும், மறுநாள் 5 தவளைகளையும் உயிருடன் விழுங்கியுள்ளார்.
அடுத்து நடந்தது என்ன?
மறுநாளே அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படவே இது குறித்து தனது மகனிடம் தெரிவித்துள்ளார். அவரது மகன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தவளையின் உடலில் இருந்து ஒட்டுன்னிகள் மூதாட்டியின் வயிற்றுக்குள் நுழைந்து வயிற்று வலியை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, 12 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
"இதே போல் முதியவர்கள் பலர் பாம்பின் பித்தப்பை, மீனின் பித்தப்பைகளை பச்சையாக விழுங்குகின்றனர். தவளையின் தோலை தங்கள் உடல்களில் தடவி கொள்கின்றனர். இது எந்த தீர்வையும் தராது. மாறாக உடல்நல பாதிப்பை அதிகரிக்கும்.
பெரும்பாலான முதியவர்கள் தங்களின் உடல் பிரச்சினைகளை குடும்பத்தினரிடம் தெரிவிப்பதில்லை. இது போன்ற ஆபத்தான முயற்சிகளை செய்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் போதே மருத்துவமனை வருகின்றனர்" என மருத்துவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |